NATIONAL

பட்டாசு விற்பனை செய்யும் கடை தீப்பற்றியது

18 ஏப்ரல் 2023, 9:37 AM
பட்டாசு விற்பனை செய்யும் கடை தீப்பற்றியது

கோலாலம்பூர், ஏப்.17: இங்குள்ள ஜாலான் ராஜா போட், சௌ கிட் என்ற இடத்தில் பட்டாசு விற்பனை செய்யும் கடை ஒன்று தீ பற்றி எரிந்துள்ளது. மேலும், அக்கடைக்கு வணிகம் செய்வதற்கான உரிமம் இல்லை என்பது கண்டறியப்பட்டது.

சமூக ஊடகங்களில் வைரலான இந்த சம்பவம் குறித்து விசாரணை அறிக்கை திறக்கப் பட்டுள்ளதாகவும், அதில் தொடர்புடைய நபர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் டாங் வாங் மாவட்டக் காவல்துறை தலைமை உதவி ஆணையர் நூர் டெல்ஹான் யஹாயா தெரிவித்தார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இரவு 10.50 மணியளவில் நடந்த இந்த சம்பவம் வெடிபொருள் சட்டம் 1957 பிரிவு 6, தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

மேலும், பொதுமக்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும், சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.