NATIONAL

செபராங் ஜெயாவின் காற்று மாசுபாட்டின் அளவு ஆரோக்கியமற்றதாக உள்ளது  

17 ஏப்ரல் 2023, 7:42 AM
செபராங் ஜெயாவின் காற்று மாசுபாட்டின் அளவு ஆரோக்கியமற்றதாக உள்ளது  

புக்கிட் மெர்தாஜாம், ஏப்ரல் 17: செபராங் ஜெயாவின் காற்று மாசுப்பாட்டின் குறியீடு (IPU) ஆரோக்கியமற்ற அளவீடு பதிவுசெய்துள்ள வேளையில் மற்ற மூன்று இடங்களில் மிதமான அளவில் பதிவாகியுள்ளது.

இன்று காலை 10 மணி வரை செபராங் ஜெயா 151யில் காற்று மாசுப்பாட்டின் அளவைச் சுற்றுச்சூழல் துறையின் (JAS) இணையத்தளம் பதிவு செய்தது. நேற்று இரவு 9 மணி முதல் அப்பகுதியில் காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக இருப்பதையும் காட்டுகிறது.

சுற்றுச்சூழல் துறையின் கூற்றுப்படி, செபராங் ஜெயாவின் காற்று மாசுப்பாட்டின் அளவு இன்று காலை 7 மணிக்கு 132 ஆக இருந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு 135 ஆகவும் பின்னர் 141 ஆகவும் அதிகரித்துள்ளது.

மிதமான அளவில் காற்று மாசுப்பாட்டின் அளவீட்டைப் பதிவு செய்த மற்ற பகுதிகள், மைண்டன் (95), செபராங் பிரை (91) மற்றும் பாலெக் புலாவ் (82) ஆகும்.

பூஜ்ஜியத்திற்கும் 50க்கும் இடைப்பட்ட காற்று மாசுப்பாட்டின் அளவு நல்ல காற்றின் தரமாகும்; மேலும், 51 முதல் 100 மிதமானது, 101 முதல் 200 ஆரோக்கியமற்றது, 201 முதல் 300 மிகவும் ஆரோக்கியமற்றது, 300 மற்றும் அதற்கு மேல் ஆபத்தானது ஆகும்.

முன்னதாக, இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அமாட், பெருந்தோட்டம் மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளுக்குத் திரும்பிய கடந்த மூன்று வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு புகைமூட்டம் நிகழ்வு மிகவும் தீவிரமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுவதாகத் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.