NATIONAL

மூத்தச் சகோதரனை தாக்கி காயப்படுத்தியவன் கைது

17 ஏப்ரல் 2023, 6:30 AM
மூத்தச் சகோதரனை தாக்கி காயப்படுத்தியவன்  கைது

கோலாலம்பூர், ஏப்.17: தாயுடன் தகராறு செய்ததை கண்டித்ததால், அதிருப்தியின் காரணமாக  தனது சகோதரனை அடித்துள்ளார்.

பிரிக்பீல்ட்ஸ் மாவட்டக் காவல்துறை தலைவர் ஏசிபி அமி ஹிசாம் அப்துல் ஷுகோர், நேற்று அதிகாலை 4 மணியளவில் இங்குள்ள தாமான் புக்கிட் அங்கசாவில் உள்ள அவர்களது வீட்டில் நடந்த இந்தச் சம்பவத்தில், பாதிக்கப் பட்டவரின் உடலின் பின்புறம், வலது தோள்பட்டை மற்றும் இடது கையில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

குளியலறையில் இருந்து வெளியே வர தாமதமானதால் தாயுடன் வாக்குவாதம் செய்ததைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

"24 வயதான பாதிக்கப்பட்டவர் தனது தம்பியைக் கண்டித்துள்ளார் அதன் காரணமாக  கோபமடைந்த  சகோதரன்  கத்தி,  ரப்பர் பைப் மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி  தன் சகோதரனை காயப் படுத்தியுள்ளார்.

23 வயதான சந்தேக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் மற்றும் அவருக்குக் குற்றவியல் வழக்கு மற்றும் ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் மூன்று முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது," என்று அவர் நேற்றிரவு ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அவரது சகோதரரைக் காயப்படுத்த பயன்படுத்திய ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டது.

சந்தேக நபர் இந்த செவ்வாய்க்கிழமை வரை நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும், குற்றவியல் சட்டத்தின் 324வது பிரிவின் கீழ் வழக்கு விசாரணை செய்யப்பட்டதாகவும் அமிஹிசாம் கூறினார்.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.