NATIONAL

சிலாங்கூர் எஃப்சி 4-0 என்ற கோல் கணக்கில் ஸ்ரீ பகாங் எஃப்சியை வீழ்த்தியது

16 ஏப்ரல் 2023, 3:10 AM
சிலாங்கூர் எஃப்சி 4-0 என்ற கோல் கணக்கில் ஸ்ரீ பகாங் எஃப்சியை வீழ்த்தியது

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 16: கிளானா ஜெயாவில் உள்ள பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி அரங்கத்தில் (எம்பிபிஜே), நேற்று இரவு நடந்த எஃப்.ஏ கோப்பையின் 16-வது சுற்று ஆட்டத்தில் சிலாங்கூர் எஃப்.சி 4-0 என்ற கோல் கணக்கில் ஸ்ரீ பகாங் எஃப்.சியை எளிதில் வீழ்த்தியது.

சுமார் 5,000 ரசிகர்கள் முன்னிலையில் விளையாடிய டான் செங் ஹோவின் அணி, 41வது நிமிடத்தில் நடு திடல் ஆட்டக்காரர்  முகைரி அஜ்மல் மூலம் கோல் அடித்து முதல் பாதியை முடித்தது.

இரண்டாவது பாதியில் தொடர்ந்து மேரா குனிங் ஆட்டத்தின் வேகத்தை அதிகரிக்க, 59வது நிமிடத்தில் முகைரி மீண்டும் ஸ்கோரை இரட்டிப்பாக்கினார்.

விங்கர் பைசல் ஹலீம் போட்டி முழுவதும் முயற்சிகளை மேற்கொண்டு மூன்றாவது கோலை அடித்தார்.

மேலும், 71 வது நிமிடத்தில் ரெட் ஜெயண்ட் அணித்தலைவர் பிரெண்டன் கான் தனது அணிக்கான நான்காவது கோலைப் பெற்று தந்தார். மூன்று நிமிட கூடுதல் நேரத்துக்குப் பிறகு ஆட்டம் முடிவுக்கு வந்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.