NATIONAL

சூப்பர் லீக் கால்பந்து- கிளந்தானை 3-0 கோல் கணக்கில் வீழ்த்தியது சிலாங்கூர்

10 ஏப்ரல் 2023, 2:47 AM
சூப்பர் லீக் கால்பந்து- கிளந்தானை 3-0 கோல் கணக்கில் வீழ்த்தியது சிலாங்கூர்

கோலாலம்பூர், ஏப் 10- பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற அரங்கில்

நேற்றிரவு நடைபெற்ற சூப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் சிலாங்கூர்

அணி கிளந்தானை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

சொந்த அரங்கில் கூடுதல் பலத்துடன் விளையாடிய சிலாங்கூர்

அணியினர் ஆட்டத்தின் பெரும்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில்

வைத்திருந்தனர். இவ்வணியின் முதல் கோலை ஆட்டத்தின் 28வது

நிமிடத்தில் தாக்குதல் ஆட்டக்காரர் ஏய்ரோன் டெல் வேலி அடித்தார்.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் சிலாங்கூர் அணி எதிர்முனையை நோக்கித்

தொடர்ந்து அபாயகரத் தாக்குதல் நடத்திய வண்ணம் இருந்தது.

ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் ராவுப் சலிஃபு மற்றொரு கோலை புகுத்தி

சிலாங்கூரின் கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தினார்.

ஒன்பது நிமிடங்களுக்குப் பின்னர் முகமது நோர் ஹக்கிமிடமிருந்து வந்த

பந்தை சலிஃபு லாவகமாக வலைக்குள் புகுத்தி கோல் எண்ணிக்கையை

மூன்றாக உயர்த்தினார்.

இதனிடையே, ஜொகூர் பாரு, சுல்தான் இஸ்கந்தார் புத்ரி அரங்கில்

நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஜொகூர் டாருள் தாக்சிம் (ஜே.டி.டி.)

கெடாவை 6-0 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்தது.

கோல திரங்கானு சுல்தான் மிஸான் ஜைனால் அபிடின் அரங்கில்

நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் திரங்கானு குழு கூச்சிங் எஃப்.சி.

அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மூன்று புள்ளிகளைப்

பெற்றது.

பினாங்கு, ஜோர்ஜ் டவுன் பண்டாராயா அரங்கில் நடைபெற்ற ஆட்டம்

ஒன்றில் பினாங்கு எஃப்.சி. அணி பி.டி.ஆர்.எம். அணியை 4-2 என்ற கோல்

கணக்கில் வெற்றி கொண்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.