ECONOMY

சிலாங்கூருக்கு அதிக வருகையாளர்களை ஈர்க்க கப்பல் சுற்றுலாப் பிரிவை வலுப்படுத்துவோம்

7 ஏப்ரல் 2023, 7:33 AM
சிலாங்கூருக்கு  அதிக வருகையாளர்களை ஈர்க்க  கப்பல் சுற்றுலாப் பிரிவை வலுப்படுத்துவோம்

ஷா ஆலம், ஏப்ரல் 7: டெர்மினல் கப்பால் பெர்சியாரன் பெலபுஹான் கிள்ளான் மூலம் மாநிலத்திற்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க   டூரிசம்  சிலாங்கூர் தீர்மானித்துள்ளது.

"கடந்த ஆண்டு 141 கப்பல்களில் மொத்தம் 342,721 பயணிகள் டெர்மினலுக்கு வருகை புரிந்தனர், இதில்  பிரபலமான பயணக் கப்பல்களான ஜென்டிங் ட்ரீம் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் க்ரூஸ், செலிபிரிட்டி க்ரூஸ், ரீகல் க்ரூஸ், ஸ்டார் க்ரூஸ் மற்றும் ராயல் இன்டர்நேஷனல் க்ரூஸ் ஸ்டாப் ஆகும்.

"எனவே சிலாங்கூர் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க அதன் முயற்சிகளைத் தொடர வேண்டும்  என்று அஸ்ருல் ஷா முகமட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில்   மார்ச் 27 முதல் 30 வரை  நடைபெற்ற  சீட்ரேட் குரூஸ் குளோபல் 2023 இல்,   500 கண்காட்சி நிறுவனங்களுடன் டூரிசம் ஏஜென்சி பங்கேற்றுக் கொண்ட பின்  அவர் இதனை கூறினார்.

" டூரிசம் சிலாங்கூர் மற்றும்  டூரிசம் மலேசியாவின் ஒத்துழைப்புடன், பல விளம்பரத் தொடர்கள், FAM பயணங்கள், விற்பனைப் பணிகளில், டிஜிட்டல் பிரச்சாரங்களிலும்  பங்கேற்கும் நாடுகளில்  விளம்பரங்கள் நடத்தப் படுகின்றன," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.