NATIONAL

குறைந்த கார்பன், பசுமை மற்றும் சுற்றுச்சூழல் நட்பு வீடுகளின் உரிமையாளர்களுக்கு 2023 மதிப்பீட்டு வரி தள்ளுபடி

6 ஏப்ரல் 2023, 2:23 AM
குறைந்த கார்பன், பசுமை மற்றும் சுற்றுச்சூழல் நட்பு வீடுகளின் உரிமையாளர்களுக்கு 2023 மதிப்பீட்டு வரி தள்ளுபடி

ஷா ஆலம், ஏப்ரல் 6: பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பசுமை மற்றும் குறைந்த கார்பன் சுற்றுச்சூழல் நட்பு வீடுகளின் உரிமையாளர்களுக்கு 2023 மதிப்பீட்டு வரி தள்ளுபடி திட்டத்தை வழங்குகிறது.

ஒவ்வொரு தனி வீட்டிற்கும் அதிகபட்ச தள்ளுபடி 100 சதவீதம் அல்லது RM500, எது குறைவோ அதுதான் வழங்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

"நீர், பல்லுயிர், கழிவு, போக்குவரத்து மற்றும் ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் பசுமையான மற்றும் நிலையான வாழ்க்கை முறையை கடைபிடிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது," என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

விருப்பமுள்ளவர்கள் www.mbpj.gov.my என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பத் தேதி ஏப்ரல் 1 முதல் ஜூன் 13 வரை திறந்திருக்கும்.

மேலும் தகவல்களுக்குப் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது துப்புரவு துறையை 03-7954 1440 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.