ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரில் உள்ள நான்கு மாவட்டங்கள், புத்ரா ஜெயாவில் பிற்பகல் 4 மணி வரை பலத்த மழை

5 ஏப்ரல் 2023, 5:54 AM
சிலாங்கூரில் உள்ள நான்கு மாவட்டங்கள், புத்ரா ஜெயாவில் பிற்பகல் 4 மணி வரை  பலத்த மழை

ஷா ஆலம், ஏப்ரல் 5: சிலாங்கூரில் உள்ள நான்கு மாவட்டங்கள் மற்றும் புத்ரா ஜெயாவில்

இன்று பிற்பகல் 4 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று மலேசிய

வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.

அவை கிள்ளான், கோலா லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய நான்கு

மாவட்டங்கள் ஆகும். கெடா மற்றும் பினாங்கில் உள்ள பல மாவட்டங்களிலும் இதே

வானிலை தான் இருக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அதே வானிலை பகாங்கில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களையும், தீபகற்பத்தின்

தெற்கில் உள்ள இரண்டு மாநிலங்களையும், அதாவது ஜொகூர் மற்றும் நெகிரி

செம்பிலான் முழுவதும் நிழவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம்  மணிக்கு 20 மில்லி மீட்டர்   அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது  அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன.   இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள்

http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது

myCuaca பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யவும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.