NATIONAL

ஷா ஆலம், செக்சன் 18 சீதாராமா ஆலயத்திற்கு 10,000 சதுரஅடி நிலம்- கணபதிராவ் தகவல்

3 ஏப்ரல் 2023, 9:30 AM
ஷா ஆலம், செக்சன் 18 சீதாராமா ஆலயத்திற்கு 10,000 சதுரஅடி நிலம்- கணபதிராவ் தகவல்

பூச்சோங் ஏப் 3- ஷா ஆலம், செக்சன் 18 பகுதியில் சீதாராமா ஆலயதிற்கு

10,000 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டு முறையாக ஆர்ஜிதம்

செய்யப்பட்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ்

கூறினார்.

ஷா ஆலம் வட்டாரத்தில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும்

சீதாராமா பக்தர்கள் சங்கம் அப்பகுதியில் திருக்கல்கல்யாணம் உள்பட

பல்வேறு சமய நிகழ்வுகளைத் தொடர்ச்சியாக நடத்தி வருவதாக அவர்

குறிப்பிட்டார்.

சீதாராமா ஆலயத்தை நிர்மாணிக்க அச்சங்கத்தினர் மேற்கொண்ட அயராத

முயற்சியின் பலனாக ஷா ஆலம் செக்சன் 18 பகுதியில் உள்ள 6 ஆலய

வளாகங்களை உள்ளடக்கிய பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டது என்று அவர்

சொன்னார்.

ஆலயம் கட்டுவதற்கான முறையான அனுமதி சம்பந்தப்பட்ட அரசு

துறைகளிடமிருந்து பெறப்பட்டுள்ள நிலையில் கட்டுமானப் பணிகள்

விரைவில் தொடங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பூச்சோங் ஸ்ரீநிவாச பெருமாள் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில்

கலந்து கொண்டு உரையாற்றிய போது கிள்ளான் நாடாளுமன்ற

உறுப்பினருமான அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.