ECONOMY

தீ விபத்தில் இறந்த நான்கு சகோதரர்களின் உடல்கள் பாதுகாப்பாக புதைக்கப்பட்டன.

31 மார்ச் 2023, 4:08 AM
தீ விபத்தில் இறந்த நான்கு சகோதரர்களின் உடல்கள் பாதுகாப்பாக புதைக்கப்பட்டன.

மூவார், மார்ச் 31: கம்போங் சபாக் ஆவுரில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த நான்கு  சகோதரர்களின் உடல்கள்  மூவார் பக்ரி பத்து 6 மிலுள்ள  இஸ்லாமிய  மயானத்தில்  இன்று  நல்லடக்கம்    செய்யப் பட்டது.

குழந்தையின் பெற்றோர் நபிலா சேது, 31 மற்றும் 30 வயதான தெய்ன் கோ ஹட்டுட் மிக சோகமாக இருந்தனர்.  அவர்களின் நான்கு குழந்தைகளின் எரிந்த உடல் அடக்கம் செய்யப்பட்டது.  முன்னதாக,  சுல்தானா பாத்திமா சிறப்பு மருத்துவமனையில் (HPSF) எடுத்து   செல்லப்பட்டு அடக்கம் செய்ய   கல்லறைக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்னர் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய  உறவினர்கள்  நல்லடக்க பிராத்தனையில் கலந்து கொண்டனர்.

நேற்று, அவர்கள் வசித்த வாடகை வீட்டில் 70 சதவீதம் தீப்பிடித்ததையடுத்து, அனைத்து

குழந்தைகளும் வீட்டின் சமையலறை பகுதியில் உள்ள குளியலறையில் இறந்து கிடந்தனர்.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.