NATIONAL

சுவிஸ் ஓபன் சாம்பியன்ஷிப்பில் முதலாம் இடத்தை வெல்லும் தேசிய இரட்டையர் கோ சூன் ஹுவாட்-ஷெவோன் லாய் ஜெமியின்  எண்ணம் நிறைவேறவில்லை

27 மார்ச் 2023, 4:11 AM
சுவிஸ் ஓபன் சாம்பியன்ஷிப்பில் முதலாம் இடத்தை வெல்லும் தேசிய இரட்டையர் கோ சூன் ஹுவாட்-ஷெவோன் லாய் ஜெமியின்  எண்ணம் நிறைவேறவில்லை

கோலாலம்பூர், மார்ச் 27: பேசலில் நடைபெற்ற சுவிஸ் ஓபன் சாம்பியன் ஷிப்பின் இறுதி ஆட்டத்தில் முதலாம் இடத்தை வெல்லும் தேசிய இரட்டையர் கோ சூன் ஹுவாட்-ஷெவோன் லாய் ஜெமியின்  எண்ணம் நிறைவேறவில்லை. அவர்கள் சீனாவின் பேங் மற்றும் வெய் யா ஜின் ஜோடியால்  வீழ்த்தப்பட்டனர்.

முதல் செட்டில், உலகத் தரவரிசையில் 11வது இடத்தில் இருக்கும் சூன் ஹுவாட்-ஷெவோன், சீன ஜோடிக்குக் கடும் போட்டியை கொடுக்க ஆற்றல்  கொண்டவர்களாத் தோன்றினாலும், அச்சீன ஜோடியின் அபார ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

14-16 என பின்தங்கியிருந்த போது, இரண்டாவது செட்டை மெதுவாக தொடங்கிய மலேசிய ஜோடி, 21-19 என இரண்டாவது செட்டை வென்று ஸ்கோரை சமன் செய்து பிறகு ஆட்டத்தை இறுதி செட்டுக்கு இழுத்தது.

ஹுவாட்-ஷெவோன் தொடர்ந்து ஆற்றல் மிக்க ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், எதிர் போட்டியாளர் ஜோடியின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அது போதுமானதாக இல்லை. இறுதியாக ஆட்டம் 21-17 எனச் சீன ஜோடிக்குச் சாதகமாக முடிந்தது.

2023 சீனா மாஸ்டர்ஸ் வெற்றியாளரை சூன் ஹுவாட்-ஷெவோன் சந்திப்பது இதுவே முதல் முறை ஆகும்.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.