NATIONAL

பத்து பஹாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள்  எண்ணிக்கை 263 பேராகக் குறைந்துள்ளது

25 மார்ச் 2023, 7:57 AM
பத்து பஹாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள்  எண்ணிக்கை 263 பேராகக் குறைந்துள்ளது

ஜொகூர் பாரு, மார்ச் 25: பத்து பஹாட்டில் நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 343 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 8 மணி அளவில் அந்த எண்ணிக்கை 263 பேராகக் குறைந்துள்ளது.

மேலும், தற்போது 64 குடும்பங்கள் நான்கு தற்காலிகத் தங்கும் மையங்களில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்டிருப்பதாக மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழு (ஜேபிபிஎன்) தெரிவித்தது.

மாநிலத்தின் 10 மாவட்டங்களிலும் இன்று காலை வெயிலுடன் கூடிய வானிலை பதிவான அதே வேளையில் பெட்கோக் நதியில் உள்ள  பெட்கோக்  அணையில்  18.96 மீட்டர் அளவில் எச்சரிக்கை மட்டத்தில் இருப்பதாகவும் ஜேபிபிஎன் தெரிவித்துள்ளது.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.