NATIONAL

பிரதமர் சவூதி அரேபியாவிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்

22 மார்ச் 2023, 6:42 AM
பிரதமர் சவூதி அரேபியாவிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்

புத்ராஜெயா, மார்ச் 22 - இராஜ்யத்தின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அல் சவூதின் அழைப்பின் பேரில், பிரதமர் மார்ச் 22 முதல் மார்ச் 24 வரை சவூதி அரேபியாவுக்கு அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொள்கிறார்.

கடந்த நவம்பரில் நாட்டின் 10வது பிரதமராக பதவியேற்ற பிறகு,  சவூதி அரேபியாவுக்கு அவரின் முதல் விஜயம் இதுவாகும்.

பிரதமர் இரண்டு புனித மசூதிகளின்  காவலர் மன்னர் சல்மான் பின் அப்துல்லாஜிஸ் அல் சவூத் மற்றும் முகமது பின் சல்மான் அல் சவூத் ஆகியோருடன்  சந்திப்புகளை நடத்த  திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது, பிரதமர் வர்த்தக சமூகங்கள் மற்றும் சவூதி அரேபியாவில் உள்ள மலேசியப் புலம் பெயர்ந்தவர்களுடனும் சந்திப்பை நடத்துவார்.

இந்த விஜயமானது ராஜ்யத்துடனான சிறப்பு பிணைப்பு மற்றும் நீண்டகால உறவை பிரதிபலிக்கிறது மற்றும் இருதரப்பு உறவுகளும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கும். மேலும் பல்வேறு பகுதிகளில் பரஸ்பர நலன்களால் வழிநடத்தப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆசிய பிராந்தியத்தில்  சவூதி அரேபியா, மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாகவும்,   அது நாட்டின்  இறக்குமதியின் மிகப்பெரிய ஆதாரமாகவும் உள்ளது. 2022 இல் மொத்த வர்த்தகம் ரி.ம 45.52 பில்லியன் (யு.ஸ்.டி 10.26 பில்லியன்) ஆக இருந்தது, 2021 இல்   ரி.ம 17.56   பில்லியனுடன் (யு.ஸ்.டி 4.23 பில்லியன்) ஒப்பிடுகையில்   159.2 சதவீதம்  அதிகமாகும்.

இந்த பயணத்தின் போது பிரதமருடன் அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் மற்றும் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஜாம்ப்ரி அப்துல் காதிர், தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளும் உடன் இருப்பார்கள்.

“இந்தச் சந்திப்புகள் மலேசியா சம்பந்தப்பட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு ஒரு மேடையாக இருக்கும். "சவுதி அரேபியாவில் மலேசிய வணிக சமூகம் மேற்கொள்ளக்கூடிய பொருளாதார வாய்ப்புகளை ஆராயவும், தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் மலேசியாவை ஒரு முக்கிய முதலீட்டு இடமாக மேம்படுத்தவும் அவை பிரதமருக்கு ஒரு வாகனமாகச் செயல்படும்" என்று வான் ஜைடி கூறினார்.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.