NATIONAL

தென் கிள்ளான் மாவட்டப் போலீஸ் தலைமையகத்திற்கு கணபதிராவ் வெ.10,000 நன்கொடை

21 மார்ச் 2023, 3:24 AM
தென் கிள்ளான் மாவட்டப் போலீஸ் தலைமையகத்திற்கு கணபதிராவ் வெ.10,000 நன்கொடை

கிள்ளான், மார்ச் 21- தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் 10.000 வெள்ளியை நன்கொடையாக வழங்கினார்.

நேற்று மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற 216வது போலீஸ் தின நிகழ்வில் கலந்து கொண்டபோது மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ச்சா ஹூங் ஃபோங்கிடம் அவர் இந்த நன்கொடைக்கான காசோலையை ஒப்படைத்தார்.

தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் தகவல் தொழில்நுட்ப முறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த மானியம் வழங்கப்பட்டதாக கணபதிராவ் தெரிவித்தார்.

இந்த நிதியுதவியை வழங்கிய கணபதிராவுக்கு ஏசிபி ச்சா நன்றி தெரிவித்துக் கொண்டார். பண்டமாரான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டானி லியோங் தக் சீ, கோலக்கிள்ளான் தொகுதி உறுப்பினர் அஸ்மிஸாம் ஜமான்ஹூரி, முன்னாள் போலீஸ் அதிகாரிகள், மாவட்ட மன்ற உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.