NATIONAL

ஆல் இங்கிலாந்து பூப்பந்து சாம்பியன்ஷிப் அரையிறுதி போட்டியில் லீ ஜி ஜியா தோல்வியைத் தழுவினார்

19 மார்ச் 2023, 2:47 AM
ஆல் இங்கிலாந்து பூப்பந்து சாம்பியன்ஷிப் அரையிறுதி போட்டியில் லீ ஜி ஜியா தோல்வியைத் தழுவினார்

கோலாலம்பூர், மார்ச் 19: லீ ஜி ஜியா, நேற்று நடைபெற்ற ஆல் இங்கிலாந்து பூப்பந்து சாம்பியன்ஷிப் அரையிறுதியில் சீனாவின் ஷி யூ கியாலிடம் தோல்வியுற்றார்

பர்மிங்காமில் உள்ள யுடிலிடா அரீனாவில் நடைபெற்ற அப்போட்டியில் 43 நிமிடங்களில் ஷியிடம் 19-21, 13-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து லீ ஜி ஜியா வெளியேறினார்.

முதல் செட்டில் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் லீ ஜி ஜியா. ஆனாலும், 2018 உலகச் சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கம் வென்ற ஷியுடம் தோல்வியுற்றார், இதனால் ஆட்டத்தை ரப்பர் செட்டுக்கு கொண்டு செல்லும் வாய்ப்பை இழந்தார்.

இதன் மூலம் மலேசியாவின் ஆல் இங்கிலாந்து பயண கனவு கலைந்தது.

 – பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.