NATIONAL

மேரு சுரங்கப்பாதையின் இடது பாதை மார்ச் 20 முதல் ஏப்ரல் 14 வரை மூடப்படும்

19 மார்ச் 2023, 2:42 AM
மேரு சுரங்கப்பாதையின் இடது பாதை மார்ச் 20 முதல் ஏப்ரல் 14 வரை மூடப்படும்

ஈப்போ, மார்ச் 19: மேரு சுரங்கப்பாதையின் இடது பாதை கிலோமீட்டர் (கி.மீ.) 260.30 முதல் கே.எம்.262.05 வரை, வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் (பிளாஸ்) தெற்கு நோக்கிச் செல்லும் பாதை இந்த திங்கட்கிழமை முதல் எதிர்வரும் ஏப்ரல் 14 வரை சாலை மேம்பாட்டு பணியின் காரணமாக மூடப்படும்.

சாலை செப்பனிடும் இரண்டாம் கட்ட பணியை கட்டம் கட்டமாக மேற்கொள்ள இரவு 9 மணி முதல் 12 மணி வரை அச்சாலையை மூடுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட பாதையில் போக்குவரத்து நடவடிக்கையை எளிதாக்குவதற்குத், தேவைப்பட்டால் மாற்று வழிகள் (கான்ட்ரா வழிகள்) அவ்வப்போது திறக்கப்படும்.

எனவே, ஈப்போ-கோலாலம்பூரில் இருந்து தெற்கே செல்லும் பயனர்கள், சமீபத்திய தகவல்களைப் பெறப் பிளாஸ் செயலியைப் பயன்படுத்தி தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.

"பாதிக்கப்பட்ட பகுதியைக் கடந்து செல்லும் போது, பயனர்கள் அவ்வப்போது பிளாஸ் வழங்கும் அனைத்து போக்குவரத்து அறிவிப்புகளையும் அறிவுறுத்தல்களையும் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.