NATIONAL

ஒன்பது மாவட்டங்களில் 10 வகையிலான 150 தயாரிப்புகளை விளம்பரப்படுத்த சுற்றுலா அடைவு ஏற்பாடு

15 மார்ச் 2023, 8:54 AM
ஒன்பது மாவட்டங்களில் 10 வகையிலான 150 தயாரிப்புகளை விளம்பரப்படுத்த சுற்றுலா அடைவு ஏற்பாடு

ஷா ஆலம், மார்ச் 15: ஒன்பது மாவட்டங்களில் 10 வகையிலான 150 தயாரிப்புகளை விளம்பரப்படுத்த சுற்றுலா சிலாங்கூர் மூலம் தொழில்துறை சுற்றுலா அடைவு (டைரெக்டரியை) மாநில அரசு ஏற்பாடு செய்கிறது.

ஹீ லோய் சியான் சுற்றுலா, சுற்றுச்சூழல் & பசுமை தொழில்நுட்பம் மற்றும் பூர்வக்குடியினர் விவகாரத் துறை ஆட்சிக்குழு  உறுப்பினர் கூறுகையில், சிலாங்கூர் முழுவதிலும் உள்ள சுவாரஸ்யமான இடங்களைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகள் துல்லியமான தகவல்களைப் பெற இந்த வசதி உதவுகிறது.

"அவை சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் (SMES), விவசாயத் தொழில், உற்பத்தி, படைப்பாற்றல், கல்வி, காட்சியகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள், தெருக் கலை, ஸ்பாக்கள் மற்றும் உணவு மற்றும் பானங்கள் ஆகிய பிரிவுகளாகும்," என்று அவர் கூறினார்.

சுற்றுலாப் பொருட்களின் மேம்பாட்டிற்காகப் பல்வேறு தரப்பினருடன் தனது தரப்பு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு தொடர்ந்து ஊக்குவிப்பதாகவும் லோய் சியான் தெரிவித்தார்.

"சுற்றுலா சிலாங்கூர் தொழில்துறை சுற்றுலா தொகுப்புகளையும் வழங்குகிறது, அவை சந்தையில் இருக்கும் பேக்கேஜ்களுடன் ஒன்றோடு ஒன்று இணைக்கப் பட்டுள்ளன," என்று அவர் கூறினார்.j

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.