NATIONAL

சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றக் கூட்டம் இன்று தொடங்கியது

13 மார்ச் 2023, 3:46 AM
சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றக் கூட்டம் இன்று தொடங்கியது

ஷா ஆலம், மார்ச் 13 - பதினான்காவது சிலாங்கூர் மாநிலச் சட்டப் சட்டமன்றத்தின்

ஆறாவது தவணைக்கான முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.

இந்த கூட்டத் தொடரின் அதிகாரப்பூர்வத் திறப்பு விழா இன்று காலை 9.00 மணிக்கு  மாநில அரசு செயலகக் கட்டிட மைதானத்தில் நடைபெறுகிறது.

சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ், மந்திரி புசார்

டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, சட்டமன்ற சபாநாயகர் இங் சுய் லிம், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள்.

இந்தத் தொடரில்  சுல்தான் ஷராபுடீன் இன்று அரச உரை நிகழ்த்துவார் அதன் பிறகு அமர்வு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படும்.

மாநிலச் சட்டமன்ற  உறுப்பினர்கள் மற்றும் சிலாங்கூர் அரச குடும்பத்தினருக்கான

இரவு விருந்து இன்று மாலை நடைபெற உள்ளது.

நாளை காலை 10.00 மணிக்கு அமர்வு மீண்டும் கூடும் போது, இரண்டு முதல் மூன்று நாட்கள் மேன்மை தங்கிய சுல்தானின் அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் கலந்து கொள்வர். அதைத் தொடர்ந்து மாநில

அரசின் கொள்கைகள் மற்றும் கேள்வி-பதில் அமர்வுகள் நடைபெறும்.

இந்த ஆண்டின் மத்தியில்  சிலாங்கூர் மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்  மாநிலச் சட்டப் பேரவையின் ஆறாவது தவணைக்கான கடைசிக் கூட்டத்தொடராக

இது அமைந்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.