NATIONAL

வேன் லாரியுடன் விபத்துக்குள்ளானதில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர் இறந்தார்

8 மார்ச் 2023, 4:13 AM
வேன் லாரியுடன் விபத்துக்குள்ளானதில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர் இறந்தார்

மெர்சிங், மார்ச் 8: இங்குள்ள ஜாலான் மெர்சிங்-ஜெமாலுவாங் கிலோமீட்டர் 20 இல் நேற்று, வேன் லாரியுடன் விபத்துக்குள்ளானதில்  முதியவர் ஒருவர் பலத்த காயமடைந்தார் நிலையில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர் இறந்தார்.

மெர்சிங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (BBP) செயல்பாட்டுத் தலைவர், மூத்தத் தீயணைப்பு அதிகாரி II முகமது ஜைனுடின் அஹ்மட் கூறுகையில், மெகத் ஒமார் இஸ்மாயில் (57), சம்பவ இடத்திலேயே இறந்தார் மற்றும் முகமட் ஷாஸ் முகமட் சைட் (60), பலத்த காயமடைந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக காலை 11.53 மணியளவில் தனது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததாகவும் உடனே ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

"விபத்தில் ஒரு நிசான் வேனும் 10 டன் எடை கொண்ட ஹினோ லாரி ஒன்றும் சம்பந்தப்பட்டது. இருப்பினும், லாரி ஓட்டுனர் முகமது ஃபஸ்லி பஹ்ரி (48), எந்த காயமும் அடையவில்லை," என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

மெகத் ஓமார் இறந்து விட்டதாகச் சுகாதார அமைச்சகம் (கேகேஎம்) உறுதி செய்தது. மேலும், பலத்த காயமடைந்த முகமட் ஷாஸ் மெர்சிங் மருத்துவமனைக்கு அனுப்புவதற்கு சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப் பட்டார்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.