NATIONAL

எஃப்.ஏ.எஸ். மகளிர் சூப்பர் லீக் அரையிறுதிச் சுற்றுக்குக் கிளானா யுனைடெட், எம்.பி.பி.ஜே. எஃப்.சி, தேர்வு

6 மார்ச் 2023, 9:44 AM
எஃப்.ஏ.எஸ். மகளிர் சூப்பர் லீக் அரையிறுதிச் சுற்றுக்குக் கிளானா யுனைடெட், எம்.பி.பி.ஜே. எஃப்.சி, தேர்வு

ஷா ஆலம், மார்ச் 6- சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டிலான மகளிர் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு நான்கு குழுக்கள் தேர்வாகியுள்ளன.

இம்மாதம் 4ஆம் தேதி சுபாங் ஜெயா, எம்.பி.எஸ்.ஜே. திடலில் நடைபெற்ற ஆட்டத்தில் எப்.சி. ஸ்வாட் குழுவை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்ததன் மூலம் கிளானா யுனைடெட் குழு அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் எஸ்.எஸ்.எஸ். லீபார்ட் குழுவை அதே 2-0 கோல் கணக்கில் வீழ்த்தி எம்.பி.எஸ்.ஜே. எப்.சி. குழு அரையிறுதிச் சுற்றுக்கான இடத்தைப் பிடித்தது.

நேற்று 5ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் யுபிஎன்எம் எப்.சி. குழு பிஜேகித்தா குழுவை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இதனிடையே, அரையிறுதிச் சுற்றுக்கான மற்றொரு போட்டியில் எப்.சி. ஸ்பைஸ்கோல்ஸ் மற்றும் யு.ஐ.டி.எம். லையனஸ் குழுக்கள் முழு நேர ஆட்டத்தின் போது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டன.

இதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட பினால்டியில் எப்.சி. ஸ்பைஸ்கேல்ஸ் குழு 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இவ்விரு அரையிறுதி ஆட்டங்களும் வரும் 11ஆம் தேதி அரேனா எம்.பி.பி.ஜே. சுபாங் ஜெயாவில் நடைபெறும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.