NATIONAL

வெள்ளத்தால் பொருட்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி

6 மார்ச் 2023, 7:49 AM
வெள்ளத்தால் பொருட்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி

செகாமாட், மார்ச் 6: செகாமாட் நகரில் பை, காலணி மற்றும் துணி வியாபாரி லியாவ் சின் பிங், தனது கடையில் உள்ள பொருட்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி தரப்படும் என மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

லியாவ் கூறுகையில், நான் ஏலத்தை நடத்துவது இது மூன்றாவது முறையாகும், இதற்கு முன்பு 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட மோசமான வெள்ளத்தின் போது நான் ஏலத்தை நடத்தியுள்ளேன்," என்றார்.

மேலும் மார்ச் 1 ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளம், 2016 க்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான வெள்ள பேரிடர் ஆகும் எனக் குறிப்பிட்டார். இந்த வெள்ளத்தால், கடையில் உள்ள பொருட்கள் சேதமடைந்ததாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், இங்கு துப்புரவு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், துப்புரவு பணிக்கு நீண்ட நேரம் எடுக்கும் என்பதால் சில கடைகளை மூட வேண்டியுள்ளதாகவும் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.