NATIONAL

மனைவியைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரருக்கு ஏழு நாள் தடுப்புக் காவல்

6 மார்ச் 2023, 3:53 AM
மனைவியைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரருக்கு ஏழு நாள் தடுப்புக் காவல்

கங்கார், மார்ச் 6- மனைவியைச் சுட்டுக் கொன்ற லான்ஸ் கார்ப்ரல் அந்தஸ்துடையை போலீஸ்காரர் ஒருவர் விசாரணைக்காக இன்று தொடங்கி ஏழு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொலைக் குற்றத்திற்காகக் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்வதற்கு ஏதுவாக அந்த போலீஸ்காரரைத் தடுத்து வைப்பதற்கான அனுமதியை மாஜிஸ்திரேட் அனா ரோஸானா முகமது நோர் இங்குள்ள துவாங்கு பௌசியா மருத்துவமனையில் வழங்கினார்.

இருபத்தேழு வயதுடைய அந்த போலீஸ்காரர் தற்போது அந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இருபத்தாறு வயதுடைய தனது மனைவியைச் சிம்பாங் அம்பாட், கம்போங் பெண்டாங் பாருவிலுள்ள தனது வீட்டில் அந்த போலீஸ்காரர் சுட்டுக்

கொன்றதாகப் பெர்னாமா நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. இக்கொலைக்கான காரணம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.