ALAM SEKITAR & CUACA

ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வெ.5 கோடி ஒதுக்கீடு- பிரதமர் அறிவிப்பு

3 மார்ச் 2023, 8:26 AM
ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வெ.5 கோடி ஒதுக்கீடு- பிரதமர் அறிவிப்பு

சுபாங் ஜெயா, மார்ச் 3- ஜொகூர் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக  ஐந்து கோடி வெள்ளி உடனடியாக ஒதுக்கீடு செய்யப்படுவதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

அந்த மாநிலத்தில் உடனடித் தேவைகளை நிறைவு செய்வதற்காக  அந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அவர் சொன்னார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடித் தேவையை நிறைவு செய்வதற்காக ஐந்து கோடி வெள்ளி விரைந்து ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று அவர் சொன்னார்.

இன்று நாளையும் பல அமைச்சர்கள் அம்மாநிலத்திற்குச் செல்லவுள்ளனர். எனது வருகையை நான் விரைந்து ஏற்பாடு செய்வேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஜொகூர் மாநிலத்தில் வெள்ள நிலவரம் மிகவும் மோசமடைந்துள்ள நிலையில் இன்று காலை 10.00 மணி நிலவரப்படி அம்மாநிலத்திலுள்ள பத்து மாவட்டங்களில் 33,149 பேர் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.