NATIONAL

வெள்ளத்தால் முதியவர் ஒருவர் இறந்துள்ளார் – ரொம்பின்

3 மார்ச் 2023, 8:09 AM
வெள்ளத்தால் முதியவர் ஒருவர் இறந்துள்ளார் – ரொம்பின்

குவாந்தான், மார்ச் 3: வெள்ளம் வந்ததை அடுத்து, ஃபெல்டா செலான்கார் 2, ரொம்பின் பிரதான சாலையில் உள்ள பனை தோட்டத்தில் காரில் மூழ்கி முதியவர் ஒருவர் இறந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்று மாலை 6.40 மணியளவில் இச்சம்பவம் குறித்து தனது தரப்பினருக்கு தகவல் வந்ததாக ரொம்பின் மாவட்டக் காவல்துறை தலைவர் டிஎஸ்பி முகமட் அஸ்ஹரி முக்தார் கூறினார். இறந்தவர் அப்துல்லா சதார் (73) என அடையாளம் காணப்பட்டது.

  “முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர் கடந்த புதன்கிழமை வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் காணாமல் போனதாகவும், குடும்பத்தாரை தொடர்பு கொள்ளத் தவறிய தாகவும் மற்றும் அவரைத் தேடும் முயற்சி தோல்வி அடைந்ததாகவும் குடும்பத்தினர் கூறினர்.

முவாட்ஷாம் ஷா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உறுப்பினர்களுடன் காவல்துறை மற்றும் குடியிருப்பாளர்கள் உதவியுடன் பாதிக்கப்பட்டவரின் உடலை வெளியேற முடிந்தது என்று முகமட் அஸ்ஹரி கூறினார்.

நேற்றிரவு ரொம்பினில் உள்ள முவாட்ஷாம் ஷா மருத்துவமனையில் நடந்த பிரேதப் பரிசோதனையில் அப்துல்லா நீரில் மூழ்கியதால் இறந்தது உறுதி செய்யப்பட்டதாகவும், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்ட தாகவும் அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.