ALAM SEKITAR & CUACA

இன்று மாலை சிலாங்கூரில் உள்ள நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை

3 மார்ச் 2023, 6:41 AM
இன்று மாலை சிலாங்கூரில் உள்ள நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய  கனமழை

ஷா ஆலம், மார்ச் 3: மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) இன்று மாலை

சிலாங்கூரில் உள்ள நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்

மற்றும் பலத்த காற்றும் வீசும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவை பெட்டாலிங், கோலா லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய

மாவட்டங்கள் என்று முகநூல் வழியாக மெட்மலேசியா தெரிவித்துள்ளது. இதே

நிலைதான் கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா முழுவதும் ஏற்படும் என

கணிக்கப்பட்டுள்ளது.

கிளந்தான் (ஜெலி, தானா மேரா, மாச்சாங் மற்றும் கோலக் கிராய் ), திரங்கானு (உலு

திரங்கானு), சபா (தம்புனான்), மேற்கு கடற்கரை (ரானாவ்), சண்டக்கான் மற்றும் கூடாத் ஆகிய இடங்களையும் மோசமான வானிலை தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும். பொதுமக்கள் துல்லியமான தகவல்களுக்கு www.met.gov.my என்ற இணையதளத்தைப்

பார்க்கவும் அல்லது myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.