ALAM SEKITAR & CUACA

பேரிடர் மீட்புக் குழு ஜொகூர் மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது

3 மார்ச் 2023, 6:22 AM
பேரிடர் மீட்புக் குழு ஜொகூர் மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது

ஷா ஆலம், மார்ச் 3: ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சிலாங்கூர் மலேசியக் குடிமைத் தற்காப்புப் படை (ஏபிஎம்) பேரிடர் மீட்புக் குழுவை (பராஸ்) அனுப்பியது.

ஓர் அதிகாரி மற்றும் 13 மற்ற தரவரிசை பணியாளர்களை கொண்ட குழு நேற்று நாட்டின் தெற்கு பகுதிக்குச் சென்றதாக ஏஜென்சியின் மக்கள் தொடர்பு மற்றும் ஆவணப்படுத்தல் பிரிவு தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் அதிகாரிகளுக்கு எல்லாம் எளிதாக அமைய பிரார்த்திக்கிறோம் என இன்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

இன்றைய நிலவரப்படி, ஜொகூரில் உள்ள 10 மாவட்டங்களில் மொத்தம் 25,213 பேர் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர். அதில் செகாமட் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஜொகூர் மற்றும் பகாங்கில் பல பகுதிகள் எதிர்வரும் சனிக்கிழமை வரை மோசமான அளவில் கனமழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.