குவாந்தான், மார்ச் 2: சினி, பெக்கானில் உள்ள சுங்கை பாசிர், கம்போங் செரி மக்மூரில் நேற்று, ஒரு சிறுவன் காணாமல் போனதாகக் கூறப்பட்டதை அடுத்து, நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பெக்கான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (பிபிபி) தலைவர் வான் சம்சுல் எஃபென்டி வான் மஹ்மூத், இன்று ஓர் அறிக்கையின் மூலம், பாதிக்கப்பட்ட முஹம்மது ஹபிஜான் அப்த் சைப் (10) பிற்பகல் 2.50 மணியளவில் காணாமல் போனதாக நம்பப்படுகிறது என்றார்.
நேற்று மதியம் பெக்கான் நீர் பாதுகாப்பு படையுடன் (PPDA) பொதுமக்களும் இணைந்து அச்சிறுவன் காணாமல் போனதாக நம்பப்படும் இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் தேடுதல் பணியை மேற் கொண்டனர் என்று அவர் கூறினார்.
வானிலை மற்றும் இருண்ட சூழல் காரணமாக நேற்று இரவு 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்ட இந்த நடவடிக்கை இன்று காலை தொடர்ந்ததாக அவர் கூறினார்.
- பெர்னாமா








