NATIONAL

வெள்ளத்தில் சிக்கிய எஸ்.பி.எம். மாணவர்களின் மறு தேர்வுக்கான நாள், இடம் மறு அட்டவணையிடப்படும்

2 மார்ச் 2023, 1:00 PM
வெள்ளத்தில் சிக்கிய எஸ்.பி.எம். மாணவர்களின் மறு தேர்வுக்கான நாள், இடம் மறு அட்டவணையிடப்படும்

புத்ராஜெயா, மார்ச் 3- வெள்ளத்தில் சிக்கிய காரணத்தால் 2022ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம். தேர்வை எழுத முடியாமல் போன 431 மாணவர்கள் மறுபடியும் தேர்வை எழுதுவதற்கான இடம் மற்றும் நாள் மறுஅட்டவணையிடப்படும் என்று கல்வியமைச்சு கூறியுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவர்களின் முழுமையான தகவல்களைத் திரட்டும் பணியில் தேர்வு வாரியம் ஈடுபட்டு வருவதாகக் கல்வியமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.

மாநில கல்வி இயக்குநரிடமிருந்து உறுதிச் சான்று கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மறு தேர்வு எழுதுவதற்கான அட்டவணை வெளியிடப்படும் என்று அது தெரிவித்தது.

தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக ஜொகூர், பகாங் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் உள்ள 17 தேர்வு மையங்கள் பாதிக்கப்பட்டன. வெள்ளம் காரணமாகச் சாலைகள் முழுமையாகத் துண்டிக்கப்பட்ட காரணத்தால் அவற்றில் ஏழு மையங்களுக்குச் செல்ல முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜொகூர் மற்றும் பகாங்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 195 மாணவர்கள் அரசாங்கத் துறைகளின் ஒத்துழைப்புடன் தேர்வு மையங்களுக்கு வெற்றிகரமாகக் கொண்டுச் செல்லப்பட்டனர் என்றும் அது கூறியது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.