ALAM SEKITAR & CUACA

பகாங் மற்றும் ஜொகூர் மாநிலங்களில் சனிக்கிழமை வரை கனமழை தொடரும்

2 மார்ச் 2023, 11:28 AM
பகாங் மற்றும் ஜொகூர் மாநிலங்களில் சனிக்கிழமை வரை கனமழை தொடரும்

கோலாலம்பூர், மார்ச் 2: பகாங் மற்றும் ஜொகூர் மாநிலங்களில் உள்ள சில பகுதிகள் கனமழையால் பாதிக்கப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலை சனிக்கிழமை வரை மோசமான அளவில் தொடரும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.

இத்தகைய வானிலை பகாங்கில் பெக்கான் மற்றும் ரோம்பின் மாவட்டங்களில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் செகாமட், குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜொகூர் பாருவிலும் கனமழை ஏற்படக்கூடும்.

இதற்கிடையில், திரங்கானு, பகாங், ஜொகூர் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் தொடர் மழை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.