ஷா ஆலம், மார்ச், 2- பெட்டாலிங் ஜெயா போக்குவரத்து தணிப்பு அடுக்கு நெடுஞ்சாலைத் திட்ட (பிஜேடி லிங்க்) நிர்மாணிப்புக்கு மாநில அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை.எனினும், இத்திட்டத்திற்கான அனுமதியை மத்திய அரசு ஏற்கனவே வழங்கி விட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சொன்னார்.
பிஜேடி லிங்க் திட்டம் தொடர்பான மாற்றுப் பரிந்துரைகளை மேம்பாட்டு நிறுவனம்
இன்னும் சமர்ப்பிக்கவில்லை. இத்திட்ட அமலாக்கத்தில் பொது மக்களிடமிருந்து
புகார்கள் வராமல் பார்த்துக் கொள்கிறோம் என்று மட்டுமே அவர்கள் கூறியிருந்தனர்
என்று அவர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட மேம்பாட்டாளர்கள் எங்களை வந்து பார்த்தாலொழிய இந்த பிஜேடி லிங்க் திட்டம் தொடர்பில் மாநில அரசு எந்த முடிவையும் எடுக்காது என்று அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
பிஜேடி லிங்க் திட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கு முன் அதன் தொடர்பில் மேம்பாட்டு நிறுவனம் முன்வைக்கும் பரிந்துரையை மாநில அரசு ஆராயும் என்று அமிருடின்
கடந்தாண்டு ஜூலை மாதம் கூறியிருந்தார்.
இந்த திட்டத்தை எதிர்த்து 50 பேர் பெட்டாலிங் ஜெயா ஜாலான் புரெப்.கூ காய் கிம் சாலையில் இதற்கு முன்னர் மறியலில் ஈடுபட்டனர்.
NATIONAL
பிஜேடி லிங்க் திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி வழங்கவில்லை- மந்திரி புசார் விளக்கம்
2 மார்ச் 2023, 3:31 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
பெரோடுவா கார்களுக்கான பராமரிப்புச் சேவைக் கட்டணம் 10 விழுக்காடு குறைகிறது
Latchumy Ramamoorthy
18 ஜூன் 2026

national
எங்களுக்கு நல்ல ஒற்றையர் வீரர்கள் இல்லை என்பது உண்மையல்ல-பிஏஎம்
Pakiya
7 மே 2026

national
தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் அன்வார் நாளை சிறப்புரை வழங்குவார்
Rajah Ramaya
29 ஆகஸ்ட் 2025

national
நாளை ஸ்மார்ட் பார்க்கிங் முறை மூன்று பிபிடிகளில் செயல்படுத்தப்படும்
Shalini Rajamogun
31 ஜூலை 2025

வகைnational
உங்கள் கருத்து என்ன?



