NATIONAL

குவாந்தன்-செகாமட் சாலை (கிலோமீட்டர் 73) முழுமையாக மூடப்பட்டுள்ளது

2 மார்ச் 2023, 3:01 AM
குவாந்தன்-செகாமட் சாலை (கிலோமீட்டர் 73) முழுமையாக மூடப்பட்டுள்ளது

குவாந்தான், மார்ச் 2: நேற்று பெய்த தொடர் கனமழை காரணமாக, பெக்கானில் உள்ள குவாந்தன்-செகாமட் சாலை (கிலோமீட்டர் 73) இன்று முழுமையாக மூடப்பட்டுள்ளது.

பழுது பார்க்கும் பணி முடியும் வரை அச்சாலை மூடப்படும் என்று பெக்கான் மாவட்டக் காவல்துறை தலைமையகம் அதிகாரப்பூர்வ முகநூலில் ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

"நகரின் பொதுப்பணித் துறையின் (ஜே.கே.ஆர்) பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்ற பிறகு அச்சாலை மூடப்பட்டது. மேலும் பாதையில் நிறுவப்பட்ட அறிவுறுத்தல் பலகைகளைக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு பொதுமக்கள் 09-4221 999 என்ற எண்ணின் மூலம் பெக்கான் மாவட்டக் காவல்துறை தலைமையகம் செயல்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.