ALAM SEKITAR & CUACA

நாட்டில் பல மாநிலங்களில் தொடர் மழை எச்சரிக்கை

28 பிப்ரவரி 2023, 12:44 PM
நாட்டில் பல மாநிலங்களில் தொடர் மழை எச்சரிக்கை

கோலாலம்பூர், பிப் 28: ஜொகூரில் உள்ள க்ளுவாங், மெர்சிங், கோத்தா திங்கி மற்றும் ஜொகூர் பாரு ஆகிய இடங்களில் இந்த வியாழன் (மார்ச் 2) வரை ஆபத்தான அளவில் கனமழை தொடரும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.

பகாங்கில் பெக்கான் மற்றும் ரோம்பினையும், ஜொகூரில் தங்காக், செகாமட், மூவார், பத்து பஹாட் மற்றும் பொதியானையும் மிக ஆபத்தான அளவில் தொடர் கனமழை தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பேராக்கில், மன்சோங், கிந்தா, பேராக் தெங்கா, கம்பார், பாகான் டத்தோ, ஹிலிர் பேராக், பத்தாங் பாடாங், முஹாலிம் மற்றும் பகாங்கில் கேமரன் ஹைலேண்ட்ஸ், லிப்பிஸ், ரவூப், ஜெரான்டுட் , பெந்தோங், தெமர்லோ, மாரான், குவாந்தன் மற்றும் பெரா ஆகிய இடங்களில் நாளை வரை தொடர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா திரங்கானு, சரவாக் ஆகிய மாநிலங்களிலும் மழை பெய்யக்கூடும்.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.