ஷா ஆலம், பிப் 28- சிலாங்கூர் மாநிலத்தின் புதிய போலீஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டத்தோ ஹூசேன் ஓமார் கான் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களை நேற்று மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இங்குள்ள புக்கிட் காயாங்கான் அரண்மனையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது மாநிலத் துணைப் போலீஸ் தலைவர் டத்தோ எஸ். சசிகலா தேவியும் உடனிருந்தார்.
மாநிலத்தின் புதிய போலீஸ் தலைவராக ஹூசேன் இம்மாதம் 24ஆம் தேதி நியமிக்கப்பட்டார். 52 வயதான அவர் 27 ஆண்டுகளாக அரச மலேசியப் போலீஸ் படையில் பணியாற்றி வருகிறார்.
இங்கிலாந்தின் லெய்செஸ்டர் பல்கலைக்கழத்தில் தடய விசாரணை அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள ஹூசேன், புக்கிட் அமான் குற்றப்புனாய்வுத் துறையில் (உளவு/நடவடிக்கை) துணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.








