NATIONAL

ஹோட்டலின் 14 மாடியிலிருந்து விழுந்து 12 வயது சிறுவன் மரணம்

27 பிப்ரவரி 2023, 5:08 AM
ஹோட்டலின் 14 மாடியிலிருந்து விழுந்து 12 வயது சிறுவன் மரணம்

கோத்தா கினபாலு, பிப் 27- பன்னிரண்டு வயதுச் சிறுவன் ஒருவன் கோத்தா கினபாலுவிலுள்ள ஹோட்டல் ஒன்றின் 14வது மாடியிலிருந்து விழுந்து பரிதாபமாக மரணமடைந்தான்.

அந்த ஹோட்டலின் 14வது மாடியிலிருந்து விழுந்த அச்சிறுவனின் உடல் நான்காவது மாடியிலுள்ள வராண்டாவில் கண்டு பிடிக்கப்பட்டதாகச் சபா மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை அறையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் காலை 6.44 மணியளவில் தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து கோத்தா கினபாலு தீயணைப்பு நிலையத்திலிருந்து எழுவர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.

அந்த சிறுவனை நான்காவது மாடியிலிருந்து கீழ்த்தளத்திற்குக் கொண்டு வருவதற்குத் தீயணைப்பு வீரர்கள் உதவினர். அச்சிறுவனுக்கு முதலுதவி வழங்கியச் சுகாதார அமைச்சின் குழுவினர் அவன் உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினர் என்றார் அவர்.

மேல் நடவடிக்கைகாக அச்சிறுவனின் உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.