NATIONAL

உகாண்டா அனைத்துலக பூப்பந்துப் போட்டியில் ஜஸ்டின், லெட்சனா வெற்றி

27 பிப்ரவரி 2023, 2:23 AM
உகாண்டா அனைத்துலக பூப்பந்துப் போட்டியில் ஜஸ்டின், லெட்சனா வெற்றி

கோலாலம்பூர், பிப் 27 - உகாண்டா சர்வதேசப் பூப்பந்து வெற்றியாளர் கிண்ணப் போட்டியில்  ஆடவர் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவுகளில் வென்றதன் மூலம்

வளர்ந்து வரும் நட்சத்திரங்களான ஜஸ்டின் ஹோ மற்றும் கே.லெட்சனா ஜோடியினர்  நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

உலகத் தரவரிசையில் 111-வது இடத்தில் உள்ள ஜஸ்டின், ஓய்வுபெற்ற டத்தோ லீ சோங் வெய்க்கு மாற்று ஆட்டக்காரராக விளங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் கம்பாலாவில் உள்ள எம்.டி.என் அரங்கில்  நேற்று நடைபெற்ற ஆடவர் பிரிவின்

இறுதியாட்டத்தில் இந்தியாவின் கனிஷ்க் எம் என்ற விளையாட்டாளரை  (21-8, 21-12)

என்ற நேர் செட்களில் வீழ்த்தி பட்டத்தை வென்றார்.

ஜெர்மனியில் கடந்தாண்டு  ஜூன் மாதம் அகில இங்கிலாந்து போட்டி, குரோஷிய பொது பூப்பந்து போட்டி மற்றும் கடந்த டிசம்பரில் ஈப்போவில் நடந்த மலேசியா

அனைத்துலக சவால் கிண்ணம் ஆகியவற்றுக்குப் பிறகு அந்த 18 வயது

விளையாட்டாளர் பெற்ற நான்காவது அனைத்துலக வெற்றி இதுவாகும்.

இதற்கிடையில், பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் லெட்சனா தனது துருக்கிய போட்டியாளயான நெஸ்லிஹான் இகிட்டை 21-11, 21-8 என்ற நேர் செட்களில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இது 19 வயதான லெட்சனா பெற்ற அனைத்துலக நிலையிலான முதல் வெற்றியாகும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.