ECONOMY

ரிக்டரில் 6.2 எனப் பதிவான நிலநடுக்கம் பாப்புவா நியுகினியை உலுக்கியது

26 பிப்ரவரி 2023, 7:49 AM
ரிக்டரில் 6.2 எனப் பதிவான நிலநடுக்கம் பாப்புவா நியுகினியை உலுக்கியது

சிட்னி, பிப் 26 -  நேற்றிரவு  9.24  மணிக்கு பப்புவா நியூ கினியின் காண்ட்ரியனில் இருந்து வடகிழக்கே 29 கிமீ தொலைவில் 6.2 ரிக்டர் அளவில்  எனப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

38.158 கிமீ ஆழத்தில்  மையம் கொண்ட இந்த  நிலநடுக்கம், 6.111 டிகிரி தெற்கு அட்சரேகை மற்றும் 149.7927 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் ஏற்பட்டதாக ஷின்ஹூவா செய்தி நிறுவனம் கூறியது.

இந்த  நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

சனிக்கிழமையன்று  10.50 மணிக்கு கன்ட்ரியனின் கிழக்கு-வடகிழக்கே 37 கிமீ தொலைவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும்  அந்த அமைப்பு கூறியது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.