NATIONAL

விளையாட்டு துறையை மேம்படுத்த 2023 பட்ஜெட்டில் RM324 மில்லியன் ஒதுக்கீடு

25 பிப்ரவரி 2023, 3:37 AM
விளையாட்டு துறையை மேம்படுத்த 2023 பட்ஜெட்டில் RM324 மில்லியன் ஒதுக்கீடு

கோலாலம்பூர், பிப் 25: தேசிய விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சித் திட்டங்கள் மற்றும் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் 2023 பட்ஜெட்டில் RM324 மில்லியன் ஒதுக்கியுள்ளது.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், விரிவான விளையாட்டு சூழலை உருவாக்கவும், நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வசதிகளை பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற நோக்கங்களுக்காகவும் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

விளையாட்டு வீரர்களின் நலனைப் பாதுகாக்கவும் இந்த ஆண்டு முதல் தேசிய யாயாசான் கெபாஜிகான் அறக்கட்டளைக்கு (YAKEB) 5 மில்லியன் ரிங்கிட் வழங்கப்படும் என்றார்.

"அதே நேரத்தில், முன்னாள் தேசிய விளையாட்டு வீரர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளுக்கு வரி விலக்கு அளிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது," என்றார்.

அடிப்படை அளவில் விளையாட்டு மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தும் இலாப நோக்கமற்ற நிறுவனங்களுக்குப் பங்களிக்கும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு மொத்த வருமானத்தில் 10 சதவீதம் வரை வரி விலக்கு அளிக்க அரசு ஒப்புக் கொண்டதாகப் பிரதமர் கூறினார்.

மேலும், பள்ளி மற்றும் சமூக அளவில் விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்காக 20 மில்லியன் ரிங்கிட் வழங்கப்படும்.

இதற்கிடையில், உள்ளூர் கலைப் பொருட்கள் சந்தைப்படுத்துதல் தீவிரப்படுத்துவது மேலும் ஆக்கப்பூர்வமான படைப்புகளின் உற்பத்தியை ஊக்குவிக்கும் டிஜிட்டல் உள்ளடக்க நிதியாக RM102 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

"உள்ளூர் எழுத்தாளர்களின் உயர்தர வெளியீட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் 20 மில்லியன் ரிங்கிட் வழங்கப்படுகிறது,'' என்றார்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.