கோலாலம்பூர், பிப் 25: இல்திசம் சிலாங்கூர் சிஹாட் திட்டம் (ஐஎஸ்எஸ்) மடாணி மருத்துவத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கத்திற்கு ஒரு முன்மாதிரியாக இருந்துள்ளது.
"மடாணி மருத்துவத் திட்டம் மட்டுமல்ல சிலாங்கூரில் முதலில் தொடங்கப்பட்ட மோட்டார் சைக்கிள் உரிமங்களுக்கான ஓட்டுநர் சோதனைக் கட்டணம் போன்ற பல திட்டங்கள் அரசாங்கத்திற்கு முன் மாதிரியாக அமைந்துள்ளன.
"சிலாங்கூரில் பல திட்டங்கள் ஒற்றுமை அரசாங்கத்திற்கு முன்மாதிரியாக பயன்படுத்தப்படுகின்றன. அத்திட்டங்களைச் செயல்படுத்தப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் அவை எவ்வாறு செயல்படுத்தப் படுகின்றன என்பதையும் அவற்றைச் செயல்படுத்துவதில் எதிர் கொள்ளும் சவால்களையும் பகிர்ந்து கொள்ள இயலும்," என்று அவர் கூறினார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நேற்று பாராளுமன்றத்தில் பிரதமர் சமர்ப்பித்தார். பட்ஜெட் சமர்ப்பணத்தின் போது, ஏழைகள் மருத்துவமனைகள் மற்றும் தனியார் பொது மருத்துவர்களிடம் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக அரசு மடாணி மருத்துவத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் என்று பிரதமரும், நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார் குறிப்பிட்டார்.
பிரதமரின் கூற்றுப்படி, சிலாங்கூரில் செயல்படுத்தப்பட்ட திட்டத்திற்கு RM120 மில்லியன் ஒதுக்கப்பட்டது.








