கோலாலம்பூர், பிப் 24 - எதிர்வரும் ஏப்ரல் மாதம் கொண்டாடப்படவிருக்கும் நோன்பு பெருநாளை முன்னிட்டு அரசு துறையில் உள்ள கிரேட் 56, அதற்கு கீழ்ப்பட்ட மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு 700 வெள்ளி வழங்கப்படும்.
ஓய்வு பெற்றவர்களுக்கும் 350 வெள்ளி உதவித் தொகையாக வழங்கப்படும் எனக் கூறிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையில் இந்த தொகை வழங்கப்படுகிறது என்றார்.
மக்களவையில் இன்று 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.








