கோலாலம்பூர், பிப் 24 - நாட்டில் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு ஒற்றுமை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள ரஹ்மா எனும் கருணைத் திட்டம் விரிவாக்கம் காணவுள்ளது.
இந்த திட்டத்திற்காக ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் தலா 10 கோடி வெள்ளி ஒதுக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இந்த திட்டத்தின் கீழ் அத்தியாவசிய உணவுப் பொருள்களை சந்தையை விட 30 விழுக்காடு குறைவான விலையில் வாங்குவதற்குரிய வாய்ப்பு பொது மக்களுக்குக் கிட்டும் என்று அவர் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த போது அவர் இதனைச் சொன்னார்.








