கோலாலம்பூர், பிப் 24- தனிநபர் வருமான வரி குறைக்கப்படும் என்று பிரதமர்டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.
எம்40 எனப்படும் நடுத்தர வருமானம் பெறும் தரப்பினருக்கான வருமான வரி விகிதாசாரத்தைக் குறைப்பதன் மூலம் அவர்களின் வருமானம் அதிகரிப்பதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என அவர் சொன்னார்.
இந்த வரி குறைப்பின் மூலம் சுமார் 24 லட்சம் பேர் பயனடைவர் எனக் கூறிய அவர், 1,300 வெள்ளி வரை அவர்கள் இதன் மூலம் அனுகூலம் பெற முடியும் என்றார்.








