NATIONAL

முதலீட்டை ஊக்குவிக்க சுபாங், பினாங்கு விமான நிலையங்கள் விரிவாக்கப்படும்

24 பிப்ரவரி 2023, 2:15 PM
முதலீட்டை ஊக்குவிக்க சுபாங், பினாங்கு விமான நிலையங்கள் விரிவாக்கப்படும்

கோலாலம்பூர், பிப் 24- முதலீட்டாளர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுப்பயணிகளை அதிகளவில் ஈர்ப்பதற்காகச் சுபாங் மற்றும் பினாங்கு அனைத்துலக விமான நிலையங்கள் விரிவாக்கப்படும்.

கெடா, கூலிமில் 700 கோடி வெள்ளி செலவில் புதிய விமான நிலையத்தை நிர்மாணிப்பதை விட குறைந்த செலவில் அதிக பொருளாதார வளர்ச்சியை காண்பதற்குரிய வாய்ப்பினை இந்நடவடிக்கை ஏற்படுத்தும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அனைத்துலக வர்த்தக நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்வதற்கு உதவும் நோக்கில் தனியார் மூலம் கேரித் தீவில் துறைமுகத்தை உருவாக்கும் பரிந்துரையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.