NATIONAL

செத்தியா ஆலமில் இரு ஏ.டி.எம். இயந்திரங்களைக் கொள்ளையர்கள் வெடி வைத்து தகர்த்தனர்

23 பிப்ரவரி 2023, 7:38 AM
செத்தியா ஆலமில் இரு ஏ.டி.எம். இயந்திரங்களைக் கொள்ளையர்கள் வெடி வைத்து தகர்த்தனர்

ஷா ஆலம், பிப் 23- செத்தியா ஆலமில் உள்ள வங்கி ஒன்றில் இரு ஏ.டி.எம். இயந்திரங்கள் கொள்ளையர்களால் வெடி வைத்து தகர்க்கப்பட்டன. இச்சம்பவம் இன்று அதிகாலை 6.00 மணிக்கு நிகழ்ந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்தில் போலீசார் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்று ஷா ஆலம் மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் கூறியதாகச் சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து போலீசார் விரிவான விசாணையை நடத்தி வருகின்றனர் என அவர் தெரிவித்தார். இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விரிவான தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.