கோலாலம்பூர், பிப் 22: டாமான்சாராவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் குடிவரவு துறையினரிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது, 14வது மாடியில் இருந்து 11வது மாடியில் விழுந்ததாக நம்பப்படும் நியூசிலாந்து நபர் ஒருவர் காயமடைந்தார்.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் ஹஃபிஸ்யாம் முகமட் நோர் கூறுகையில், 11வது மாடியின் கூரையில் தண்ணீர் தொட்டி உள்ள பகுதியில் அந்நபர் விழுந்துள்ளார்.
36 வயதுடைய அந்நபருக்குக் கை மற்றும் இடுப்பு எலும்பில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
“தீயணைப்புப் படையினருக்கு மாலை 5.15 மணி அளவில் அவசர அழைப்பு வந்தது. உடனே 16 நிமிடங்களுக்குள் அவ்விடத்தை அவர்கள் வந்தடைந்தனர்.
“பாதிக்கப்பட்டவர்களுக்குச் செம்பிறை சங்க குழுவால் சிகிச்சை அளிக்கப்பட்டது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
– பெர்னாமா








