ஷா ஆலம், பிப் 22- ஜானா விபாவா திட்டம் தொடர்பில் 41 லட்சம் வெள்ளியைலஞ்சமாகப் பெற்றதாகப் பெர்சத்து கட்சியின் சிகாம்புட் தொகுதி துணைத் தலைவர்
ஆடாம் ரட்லான் ஆடாம் முகமது மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று
குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி ரோஸிலா சாலே முன்னிலையில் தமக்கெதிராகக் கொண்டுவரப்பட்ட
குற்றச்சாட்டை ஒரு வணிகரான 41 வயது ஆடாம் மறுத்து விசாரணை கோரினார்.
மொத்தம் 14 கோடியே 10 லட்சம் வெள்ளி மதிப்பிலான வட கிள்ளான்
மாவட்டத் தலைமையகக் கட்டுமானத் திட்டப் பணியை மலேசிய அரசாங்கத்திடமிருந்து நெப்டுரிஸ் சென்.பெர்ஹாட் நிறுவனம் பெறுவதற்கு ஊதியமாக லியான் டான் சுவானிடமிருந்து 20 லட்சம் வெள்ளியைத் தனது நிறுவனமான சரிக்காட் பாயு பூமிராயா நிறுவனத்தின் பெயரில் காசோலையாகப் பெற்றதாக அவர் மீது
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், 4.78 கோடி செலவில் பெர்லிஸ் மாநிலத்தின் ஜாலான் சுங்கை ஆடாம் முதல்
கம்போங் பெனுட் வரையிலான சாலையை நிர்மாணிக்கும் திட்டத்திற்காக நிறுவனம்
ஒன்றின் நிர்வாக இயக்குநரான ஜூசோ மாமாட்டிடமிருந்து 21 லட்சம் வெள்ளியைப் பெற்றதாக அவர் மற்றொரு குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்
NATIONAL
பெர்சத்து கட்சியின் சிகாம்புட் தொகுதி துணைத் தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டு
22 பிப்ரவரி 2023, 4:35 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
பெரோடுவா கார்களுக்கான பராமரிப்புச் சேவைக் கட்டணம் 10 விழுக்காடு குறைகிறது
Latchumy Ramamoorthy
18 ஜூன் 2026

national
எங்களுக்கு நல்ல ஒற்றையர் வீரர்கள் இல்லை என்பது உண்மையல்ல-பிஏஎம்
Pakiya
7 மே 2026

national
தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் அன்வார் நாளை சிறப்புரை வழங்குவார்
Rajah Ramaya
29 ஆகஸ்ட் 2025

national
நாளை ஸ்மார்ட் பார்க்கிங் முறை மூன்று பிபிடிகளில் செயல்படுத்தப்படும்
Shalini Rajamogun
31 ஜூலை 2025

வகைnational
உங்கள் கருத்து என்ன?



