NATIONAL

பிப்ரவரி 16 முதல் 22 வரை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

16 பிப்ரவரி 2023, 2:35 AM
பிப்ரவரி 16 முதல் 22 வரை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

கோலாலம்பூர், பிப் 16: பிப்ரவரி 16 முதல் 22 வரை பெட்ரோல் RON97, RON95 மற்றும் டீசலின் சில்லறை விலையில் எந்த மாற்றமும் இல்லை.

நிதி அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், RON 97 லிட்டருக்கு (RM3.35) ஆகவும், RON95 (RM2.05) மற்றும் டீசல் (RM2.15) ஆகவும் உள்ளது.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில், RON95 பெட்ரோல் லிட்டருக்கு 2.05 ஆகவும் மற்றும் டீசல் லிட்டருக்கு RM2.15 என்ற உச்சவரம்பு விலையை அரசு பராமரித்து வருவதாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலகக் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கத்தை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்யத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.