NATIONAL

காணாமல் போன 10 வயது சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது

14 பிப்ரவரி 2023, 6:19 AM
காணாமல் போன 10 வயது சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது

கோலாலம்பூர், பிப் 14: கடந்த சனிக்கிழமை அம்பாங்கில் உள்ள உகே பெர்டானா வாய்க்காலில் விழுந்து காணாமல் போன 10 வயது சிறுவனின் சடலம் கற்கள் குவியலுக்கு அடியில் கண்டெடுக்கப்பட்டது.

பிரிவு 4 (உலு லங்காட்) சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைவர் ஷாரின் யூஸ்மர் மாட் யூசோப் கூறுகையில், சிறுவனின் உடல் மாலை 5.10 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து 400 மீட்டர் தொலைவிலும் மற்றும் தீயணைப்பு கட்டுப்பாட்டுச் சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவிலும் தீயணைப்பு வீரர்கள் சடலத்தைக் கண்டெடுத்ததாக அவர் கூறினார்.

“ஆரம்பத்தில் சடலம் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட இடத்தை தோண்டினோம், ஆனால் நாங்கள் அதைக் கண்டு பிடிக்கவில்லை.

 சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்த இடத்தில் ஈக்கள் பறந்ததை எனது உறுப்பினர் பார்த்தார். அப்போதுதான் எங்களுக்கு ஒரு துப்பு கிடைத்தது, நாங்கள் மீண்டும் தோண்டத் தொடங்கினோம். சிறுவனின் உடலைக் கண்டுபிடித்தோம்," என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

குழந்தையின் உடல் அழுகவில்லை என்றும், உடலில் சில பகுதிகளில் மட்டும் கொப்பளங்கள் வர ஆரம்பித்துள்ளதாகவும் ஷாரின் யூஸ்மர் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அம்பாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் என்றார்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.