NATIONAL

கனமழையால் சாலை தடுப்பு சரிந்து விழுந்தது

13 பிப்ரவரி 2023, 9:31 AM
கனமழையால் சாலை தடுப்பு சரிந்து விழுந்தது

ஷா ஆலம், பிப்.13: நேற்று மதியம் பெய்த கனமழையால் புச்சோங், தாமான் புக்கிட் கூச்சாய் என்ற இடத்தில் சலை தடுப்பு சரிந்து விழுந்தது.

சுபாங் ஜெயா நகராட்சி கழகம் (MBSJ) இந்த சம்பவத்தில் எந்தவொரு  பொருட்சேதமும் அல்லது உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

"அதைத் தொடர்ந்து, அப்பகுதியை கேன்வாஸ் பயன்படுத்தி மூடுவதற்கும், குடியிருப்பாளர்கள் மற்றும் சாலையை பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய எச்சரிக்கை பலகைகள் வைப்பதற்கும் குழு விரைவாக நடவடிக்கை எடுத்தது.

"பொறியியல் துறை நில அசைவுகள் சோதனை செய்யும்" என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

கனமழையால் பல மரங்கள் விழுந்து போக்குவரத்து தடைபட்டது மற்றும் பொருட்சேதமும் ஏற்பட்டதாக உள்ளூர் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டது.

"சம்பந்தப்பட்ட சாலை மீண்டும் செயல்பட இன்று அக் குழுவைச் சேர்ந்த ஐந்து பேர் மரங்களை வெட்டி அகற்றும் பணியை விரைவாக மேற்கொண்டார்," என்று தெரிவிக்கப்பட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.