ALAM SEKITAR & CUACA

சிலாங்கூர் முழுவதும் இன்று இரவு வரை இடியுடன் கூடிய மழை

11 பிப்ரவரி 2023, 9:29 AM
சிலாங்கூர் முழுவதும் இன்று இரவு வரை இடியுடன் கூடிய மழை

ஷா ஆலம், பிப் 11: சிலாங்கூர் முழுவதும் இன்று இரவு வரை இடியுடன் கூடிய மழையும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) கணித்துள்ளது.

கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் மலாக்கா முழுவதும் இதே நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப் படுவதாக ட்விட்டர் மூலம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கெடா, பினாங்கு, பேராக், பகாங், நெகிரி செம்பிலான் மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களில் குறிப்பிட்ட இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

மெட்மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன் பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.