NATIONAL

ஜாலான் கெந்திங் ஹைலேண்ட்ஸில் நிகழ்ந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது

11 பிப்ரவரி 2023, 3:11 AM
ஜாலான் கெந்திங் ஹைலேண்ட்ஸில் நிகழ்ந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது

கோலாலம்பூர்,  பிப் 11: கடந்த புதன்கிழமை ஜாலான் கெந்திங் ஹைலேண்ட்ஸின் கிலோமீட்டர் 4.8 இல் நிகழ்ந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மற்றொருவர் இன்று இறந்தார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் கூறுகையில், இறந்த எட்டாவது நபர் சிவ் சோங் பே (73) ஆவார். அந்நபர் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று மதியம் 1.46 மணிக்கு இறந்தார்.

காயமடைந்த மற்ற ஆறு பேரில், நான்கு பேர் இன்னும் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஒருவர் தெமெர்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்; மற்றொருவர் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

"இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பங்களுக்குப் பகாங் காவல் படை தனது இரங்கலைத் தெரிவிக்கிறது" என ஓர் அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.